மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முனைப்பில் இஸ்ரோ

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முனைப்பில் இஸ்ரோ

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முனைப்பில் இஸ்ரோ
Published on

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை வரும் டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முனைப்பு காட்டி வருகிறது. எனினும் கொரோனா பரவல் முதல் இரண்டு அலைகள் திட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ கையிலெடுத்து உள்ளது. இதை வெற்றிகரமாக நிறைவேற்றினால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக, அனைத்தும் சரியாக செயல்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்ள இரண்டு ஆளில்லா விண்கலங்களை இந்தியா செலுத்தவேண்டும். இதில் முதலாவது விண்கலத்தை டிசம்பருக்குள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள்து.

ஆனால் கொரோனா பாதிப்பால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் திட்டத்திற்கு தேவையான பல உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்காதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் திட்டத்திற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இருப்பதால் உரிய நேரத்தில் விண்கலத்தை ஏவ முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com