'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' - இஸ்ரோ தலைவர் சோமநாத்

'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' - இஸ்ரோ தலைவர் சோமநாத்
'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' - இஸ்ரோ தலைவர் சோமநாத்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் 'ககன்யான்'  ஐந்து  கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும்'' எனக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.  

மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் , ''விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டமான 'ககன்யான், 5 கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும். கடந்த 2 ஆண்டுகளாக செயற்கைக்கோள் ஏவுதல் சரக்குகளை கையாளுதல் தடைப்பட்டதால் காலதாமதம் ஆனது.

சூரியனை ஆராயும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சந்திராயன் 3 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். GSLV mak 3 செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் தொடங்கும். குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதல் மையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி'' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com