இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - இந்திய பிரதமர் நரேந்திர மோடிweb
இந்தியா
பிரதமர் மோடியை திடீரென தொடர்புகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர்.. என்ன நடந்தது?
பிரதமர் மோடியை திடீரென தொடர்புகொண்டு இஸ்ரேல் பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது..
பிரதமர் நரேந்திர மோடியுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடி உள்ளார். இதில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும்ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் எடுத்துரைத்தார். பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவுஅளிக்கும் என உறுதியளித்த பிரதமர் மோடி, காஸா அமைதித் திட்டத்தைவிரைந்து அமல்படுத்தும் முடிவுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இதில், அனைத்து வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர். இருநாட்டுத் தலைவர்களும் விரைவில் சந்திக்க முடிவு செய்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

