இந்தியாவில் ஒரு பகுதியை முதன்முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ்

இந்தியாவில் ஒரு பகுதியை முதன்முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ்
இந்தியாவில் ஒரு பகுதியை முதன்முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு முதன் முறையாக இந்தியாவில் உள்ள ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்தான். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருத்தப்பட்டது. 

இந்த சம்பவத்தை அடுத்து, ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான ‘Amaq News Agency’வில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில், விலயாஹ் ஆஃப் ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களுடைய புதிய மாகாணமாக ஐஎஸ் அறிவித்திருந்தது. சோபியானில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் இஷ்ஃபக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இலங்கையில் நடைபெற்ற கொடூரமான தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com