சிரியா, ஈராக்கைப் போல இந்தியாவிலும் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தப் போவதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மிரட்டல்விடுத்துள்ளது.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கையுடன்இருக்க, தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைப் போல் ஆறுமாதங்களுக்குள் இந்தியாவையும்
சிதைக்க பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டமிட்டுள்ளதாக, மின்னஞ்சல் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்நிலையங்களும் விழிப்புடன் இருக்கவும், சந்தேகப்படும் படியான நடவடிக்கைகளோ, நபர்களோ தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.