மாமியார் இந்திராவை விஞ்சிய சர்வாதிகாரமா இது!.. சோனியா காந்தி சட்டத்திற்கு மேலானவரா?

மாமியார் இந்திராவை விஞ்சிய சர்வாதிகாரமா இது!.. சோனியா காந்தி சட்டத்திற்கு மேலானவரா?

மாமியார் இந்திராவை விஞ்சிய சர்வாதிகாரமா இது!.. சோனியா காந்தி சட்டத்திற்கு மேலானவரா?
Published on

இந்திரா காந்தி உண்மையில் சிறைக்குச் சென்றிருந்தார். 1975 அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். பிறகு, அனைத்து வகையான புலனாய்வு அமைப்புகளின் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார். ஆனால் சோனியா காந்தி எந்த சட்ட அமைப்பு விசாரணையையும் நேரடியாக எதிர்கொள்வது இதுவே முதல்முறை.

நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் வழங்கிய சம்மனில் ஆஜராக சோனியா காந்தி செல்கிறார். அப்போது, பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது. ''மெயின் இந்திரா ஜி கி பஹூ ஹூன், அவுர் கிசி சே நஹி தர்தி ஹூன்!'' என்று அதில் சோனியா காந்தி பேசுகிறார். ''நான் இந்திரா காந்தியின் மருமகள், நான் யாருக்கும் பயப்படவில்லை!'' என்பது இதன் அர்த்தமாகும். (இந்த வீடியோ 2015 டிசம்பர் 8ல் எடுக்கப்பட்டது.)

இதன் உட்பொருள் என்ன? சோனியா காந்தி அவரது மாமியார் இந்திரா காந்தியை போலவே சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக பார்க்கப்படுகிறார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் காட்டிய வேகம் மற்றும் அட்டகாசம், பெங்களூரு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே தீக்குளிப்பு சம்பவம் போன்றவையே இதனை விளக்க போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை.

கடந்த மாதம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது இதே போன்ற எதிர்ப்பு காட்சிகள் அரங்கேறின. ஆனால் அவரது தாயார் விஷயத்தில் தீவிரம் சற்றும் அதிமாகவே இருந்ததைப் பார்க்க முடிந்தது. வலிமையான மற்றும் இரக்கமற்ற மாமியார் இந்திராவைக் கூட, ஒரு கட்டத்தில் சோனியா காந்தி மிஞ்சினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தி உண்மையில் சிறைக்குச் சென்றிருந்தார். 1975 அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். பிறகு, அனைத்து வகையான புலனாய்வு அமைப்புகளின் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார். ஆனால் சோனியா காந்தி எந்த சட்ட அமைப்பு விசாரணையையும் நேரடியாக எதிர்கொள்வது இதுவே முதல்முறை.

ஒரு கண்ணோட்டத்தில், காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் (10 ஆண்டுகள்) மீதும் முழு அதிகாரத்தை சோனியா காந்தி  செலுத்திய விதம், இந்திரா காந்தியை விட மோசமானதாகவும், சர்வாதிகாரமாகவும் இருந்தது. அவர் நேரடியாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. மாமியார் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஆனால், சோனியா காந்தி, பிரதமரை விடவும் அதிக அதிகாரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸை ஒரு கட்சி என்ற முறையில், அதன் முன்னாள் கூட்டணி கட்சிகள் கூட வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறது. கட்சிகுள்ளேயே கூட அதன் அழிவுக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார் என்ற பலத்த கிசுகிசுக்கள் இப்போது பொதுவெளியில் ஒலிக்கிறது. அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு வெளியே காட்டப்படும் எதிர்ப்புகள் ஒரு மாயையாகவே தெரிகிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல, இந்திரா காந்தியின் நீட்சி சோனியா காந்தி என்று வரலாறு சொல்கிறது.

1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திரா காந்தி செய்த சில விஷயங்களை நினைவுப்படுத்தி கொள்ளுங்கள். ஷா ஆணையத்தின் (நெருக்கடி கால கொடுமைகள் பற்றிய விசாரணை) அறிக்கையின் ஒவ்வொரு பிரதியையும் அழித்தார். கிஸ்ஸா குர்சி காவின் பிலிம் ரீல்களை எரித்தார். (இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தி பற்றிய நையாண்டி படம்) பொதுவாக அதிகார்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பதிவுகளின் ஒவ்வொரு துண்டுகளையும் அழித்தார்.

இபபோது என்ன நடக்கிறது? ஒரு சாதாரண அமலாக்கத்துறை சம்மன். சோனியா காந்தி அமைதியாக அதில் ஆஜராகி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் கட்சிக்காரர்களின் ரவுடித்தனமான நடத்தை மக்களிடத்தில் காங்கிரஸ் மீதான பார்வையை இன்னும் விலக்கி வைக்கிறது. பல தசாப்தங்களாக அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் பலனை சோனியா காந்தி இப்போது அனுபவிக்கிறார். காங்கிரஸ் கட்சியை இரண்டு முறை தீர்க்கமாக நிராகரித்த இந்திய வாக்காளர்களின் அறிவை அதிகமாக வலுப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை எதிர்கொள்ளாமல் எதிர்ப்பது நியாயமா? மனதில் உறுதியும் நேர்மையும் இருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் என்ன? கடந்த காலங்களில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, மோடி, அமித் ஷா ஆகியோர் நீதிமன்ற, சிபிஐ விசாரணைக்கு ஆஜரான போதெல்லாம் இப்படியா பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு போராட்டங்களும் எதிர்ப்புகளும் இருந்தன? சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சட்டம் தன் கடமையை செய்யும் என்ற வரிகள் சாமானியர்களுக்கு மட்டுமல்ல என்பதை இந்திராவின் மருமகளும், காங்கிரஸ்காரர்களும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.!

- ஜி.எஸ்.பாலமுருகன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com