'இது முகக்கவசமா அல்லது தாடியா?' - சுரேஷ் கோபியிடம் கலகலப்பூட்டிய வெங்கையா நாயுடு

'இது முகக்கவசமா அல்லது தாடியா?' - சுரேஷ் கோபியிடம் கலகலப்பூட்டிய வெங்கையா நாயுடு

'இது முகக்கவசமா அல்லது தாடியா?' - சுரேஷ் கோபியிடம் கலகலப்பூட்டிய வெங்கையா நாயுடு
Published on

மாநிலங்களவையில்  எம்.பி சுரேஷ் கோபியிடம், சாம்பல் நிற முகக்கவசம் அணிந்துள்ளீர்களா அல்லது தாடியுடன் உள்ளீர்களா என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுப்பிய கேள்வி அவையை கலகலப்பூட்டியது.

கடந்த வாரம் முதல் நாடாளுமன்ற அவைகளில் பல விவாதங்கள் அனலை கிளப்பிவரும் சூழலில், மாநிலங்களவையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் புன்னகைக்க வைத்தது.


 
மலையாள நடிகரும், கேரளாவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்பியுமான சுரேஷ் கோபி புதிய தோற்றத்துடன் மாநிலங்களவையில் தனது உரையை வழங்க எழுந்து நின்றார். அப்போது அவர் பேசத் தொடங்கியவுடன், அவரது தாடி மற்றும்  தோற்றம் அவையின் தலைவரான வெங்கையா நாயுடுவை முற்றிலும் குழப்பியது.

அதனைத் தொடர்ந்து வெங்கையா நாயுடு சுரேஷ் கோபியிடம்,   "நீங்கள் சாம்பல் நிற முகக்கவசம் அணிந்துள்ளீர்களா அல்லது வெண்ணிற தாடியுடன் உள்ளீர்களா?" என இந்தியில் கேட்டார்


இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, இது தாடிதான் என்றும், இது தனது அடுத்த படத்திற்கான புதிய தோற்றம் என்றும் விளக்கமளித்தார், இந்த நிகழ்வு அவையை கலகலப்பாக்கியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com