\
மணிப்பூரில் இரும்புப் பெண்மணி தோல்வி

மணிப்பூரில் இரும்புப் பெண்மணி தோல்வி

மணிப்பூரில் இரும்புப் பெண்மணி தோல்வி
Published on

மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா.

மணிப்பூரின் இரும்பு பெண்மணி எனப்படும் இவர், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியைத் துவக்கினார். அவரது மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற கட்சி மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. மணிப்பூர் முதல்வர் இபிபோ சிங்கை எதிர்த்து தோபால் தொகுதியில் ஐரோம் ஷர்மிளா போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவைச் சந்தித்த ஐரோம் ஷர்மிளா தோல்வியை தழுவினார். இபிபோ சிங் தனது தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com