”ரூ.5க்கு ஆசைப்பட்டு 1 லட்சத்தை இழந்த காண்ட்ராக்டர்” - அதிரடி காட்டிய இந்திய ரயில்வே!

”ரூ.5க்கு ஆசைப்பட்டு 1 லட்சத்தை இழந்த காண்ட்ராக்டர்” - அதிரடி காட்டிய இந்திய ரயில்வே!
”ரூ.5க்கு ஆசைப்பட்டு 1 லட்சத்தை இழந்த காண்ட்ராக்டர்” - அதிரடி காட்டிய இந்திய ரயில்வே!

நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்தியன் ரயில்வே சேவையில் அதிகபட்ச நிர்ணயிக்கப்பட்ட விலையான (MRP) 15 ரூபாய்க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்ததாக எழுந்த புகாரில் ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது ரயில்வே.

அதன்படி, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து சண்டீகருக்கு சென்ற ரயிலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த டிச.,15ம் தேதியன்று சண்டிகரில் இருந்து ஷாஜகான்பூருக்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்த ஷிவம் பாட் என்ற பயணி ரயிலில் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார்.

அதில் 15 ரூபாய் என MRP போடப்பட்டிருந்தும், வாட்டர் பாட்டிலை விற்ற தினேஷ் என்ற ஊழியர் 20 ரூபாய் வசூலித்திருக்கிறார். இதனால் கடுப்பான ஷிவம் பாட், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பகல் கொள்ளையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்கக் கேட்டும் பதிவிட்டிருக்கிறார்.

ஷிவமின் அந்த பதிவு IRCTCன் கவனத்துக்கு எட்டியதை அடுத்து ஊழியர் தினேஷின் மேலாளரான ரவிக்குமாரை லக்னோவில் வைத்து 144 (1) என்ற ரயில்வே சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. இதுபோக அந்த ஒப்பந்ததார் மீது அபராதம் விதிக்கவும் மண்டல ரயில்வே மேலாளர் மன்தீப் சிங் பாட்டியா பரிந்துரைத்திருக்கிறார்.

அதன் பேரில் ஐ.ஆர்.சி.டி.சியின் வணிகக் கிளையை ஒப்பந்தத்துக்கு எடுத்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர மவுலி மிஷ்ராவிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் அபாரதமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசியுள்ள DRM (Divisional Railway Manager) மன்தீப் சிங் பாட்டியா, “சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்ட பிறகு உரிய அபாரதம் விதித்திக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது” என்றுக் கூறியிருக்கிறார்.

முன்னதாக, இந்த சம்பவத்தின் மூலம் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஷிவம் பாட் பயணித்த ரயிலில் உள்ளடக்கிய Pantry இல்லாததால் IRCTCன் கிளை ஒப்பந்த கேட்ரிங் ரயிலில் வந்து விற்பதால் இதுபோன்று விலையை அதிகரித்து விற்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனை களையவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் மூத்த மண்டல வணிக மேலாளர் ஹரி மோகன் இதுப்பற்றி பேசியிருக்கிறார். அதில், “IRCTC-ன் மண்டல மேனேஜர் லக்னோ-சண்டிகர் ரயிலில் நடந்த சம்பவம் குறித்து அம்பாலா ரயில் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார். மேலும் ரயிலிலேயே உள்ளடக்கிய Pantry வைப்பது குறித்தும், வெளியில் இருந்து வரும் ஒப்பந்ததாரர்களின் தங்களது உணவு பொருட்களை அதிகளவு விலை வைத்து விற்பதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

- அருணா ஆறுச்சாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com