பணம் இல்லையா? கவலை வேண்டாம்.. ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி ஆஃபர்!
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து அதற்கான பணத்தை தாமதமாக செலுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. ஈபேலேட்டர் (ePayLater) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் முன்பதிவு செய்யும் டிக்கெட்டிற்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கான பணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் தட்கலில் முன்பதிவு செய்யும்போது எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய பதிவு செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை சமர்பித்து, ஒன் டைம் பாஸ்வேர்டை பெறலாம். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் பணம் செலுத்தத் தவறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி பணம் இல்லையே முன்பதிவு செய்ய முடியாதே, நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டுமே என்ற கவலையே வேண்டாம்.