இந்தியா
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய வருகிறது புதிய செயலி
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய வருகிறது புதிய செயலி
ரயில் பயணச் சீட்டுகளை விரைவாக முன்பதிவு செய்யும் வகையில் புதிய கைபேசி செயலியை ஐஆர்சிடிசி வரும் 10- ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
‘ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்’ என்ற பெயரில் வரவுள்ள புதிய செயலியில் நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி ரயில்வே இணைய தளத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரயில் பயணங்களை எளிதாக்க ஐஆர்சிடிசி கனெக்ட் செயலி பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.