\
Iran has appreciated indian navy
Irareuters

வெறும் 48 மணி நேரம்.. இந்திய வீரர்களின் அபார துணிச்சல்.. புகழ்ந்து தள்ளிய ஈரான்!

இந்திய கடற்படை வீரர்களின் அபாரமான துணிச்சலை ஈரான் வெகுவாக பாராட்டியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஈரான் நாட்டைச் சேர்ந்த அசினி என்ற மீன்பிடிக் கப்பல், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி அன்று, சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அரபிக்கடல் பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோமாலியாவின் வடகிழக்கு கடற்கரை அருகே, இந்த சம்பவம் அரங்கேறியிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கடற்படையினர், 48 மணி நேர புதிய ஆபரேஷன் ஒன்றை திட்டமிட்டனர். அதன்படி, ரோந்து பணியில் ஈடுபட்ட ஐ.என்.எஸ் கொல்கத்தா என்ற போர்க் கப்பலையும், கடல்சார் உளவு விமானங்களையும், இந்திய கடற்படை களத்தில் இறக்கியது.

Indian Navy
Indian NavyReuters

தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, அந்தக் கப்பல் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், திறமையாக செயல்பட்டு கப்பலின் உள்ளே நுழைந்த இந்திய வீரர்கள், நவீன ஆயுதங்கள் வைத்திருந்த கொள்ளையர்களை கச்சிதமாக சிறைப்பிடித்தனர். இதையடுத்து, எந்தவொரு உயிர்ச்சேதமும், காயங்களும்கூட ஏற்படாமல், கப்பலில் இருந்த 20 ஈரானிய மாலுமிகளையும், வெறும் 48 மணி நேரத்தில் இந்திய வீரர்கள் மீட்டனர். ஈரானிய கப்பலை கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருப்பது, இந்திய கடற்பரப்புக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. இந்த வழியாக வரும் வர்த்தக கப்பல்களையும், கடற்கொள்ளையர்கள் தாக்க நேரிடலாம்.

எனவேதான், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று, இந்தியா தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஈரானின் தூதரகம், தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ஆயுதப்படையினரின் இந்த துணிச்சலான மற்றும் சிறப்பான நடவடிக்கையை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. எல்லைகளை கடந்து, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதில், இந்தியா உறுதியான அர்ப்பணிப்பை கொண்டுள்ளது என்பது, இதன்மூலம் உறுதியாகியுள்ளது. இதன்மூலம், ஈரான் மற்றும் இந்தியா இடையே ஆழமான நட்புறவு நீடிப்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.