ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய உடல் தகுதித் தேர்வு

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய உடல் தகுதித் தேர்வு

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய உடல் தகுதித் தேர்வு
Published on

ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வின்போது அவர்களுக்கு கட்டாயமாக உடல் தகுதித் தேர்வு செய்யபட வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறை இன்னும் பல மாநிலங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் சிறந்த காவல்துறை அதிகாரிகளை உருவாக்கும் பொருட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கடந்த 6 மாதத்திற்கு முன் கடிதம் ஒன்று அனுப்பபட்டது. அதில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வின்போது அவர்களுக்கு கட்டாயமாக உடல் தகுதித் தேர்வு சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் முன்மொழிவை இன்னும் பல மாநிலங்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு கடைப்பிடிக்கப்படாததற்கு  காவல்துறை உயரதிகாரிகள் மத்தியில் நிலவும்  எதிர்ப்பே முக்கிய காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்த நடைமுறையை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே இதுவரை ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வின் போது உடல்தகுதித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாஜக ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவில் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாள்தோறும் 24 மணி நேரம் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு மீண்டும் உடல் தகுதித் தேர்வு செய்யபட வேண்டும் என்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com