தீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் தம்பி!

தீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் தம்பி!

தீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் தம்பி!
Published on

காஷ்மீரில் கடந்த மே மாதத்தில் மட்டும் 20 பேர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மூளைச் சலவை செய்து தங்கள் இயக்கங்களுக்கு தீவிரவாதிகள் இழுக் கின்றனர். இந்நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 20 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இதில் அரசு பாலிடெக்னிக்கில் படித்த ரூப், ஐபிஎஸ் அதிகாரி இனாம் -உல்-ஹக் மெங்கூவின் சகோதரரும் யுனானி டாக்டருமான ஷாம்ஸ்- உல்-ஹக்கும் அடங்குவர். 

இவர்கள், அதிகமாக சண்டை நடக்கும் சோபியான், புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐஎஸ்ஐஎஸ்- காஷ்மீர் மற்றும் அன்சார் கஸ்வாத் -உல்- இந்த் என்ற தீவிரவாத அமைப்புகளில் இவர்கள் இணைந்துள்ளனர். இன்னும் 16 பேரை காணவில்லை. இவர்களும் தீவிரவாத அமைப்பு களில் இணைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரம்ஜான் நோன்பை முன்னிட்டு காஷ்மீரில் தற்காலிகமாக ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவல் காஷ்மீரில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com