இந்தியா
ப.சிதம்பரத்திற்கு ஆக. 30 வரை சிபிஐ காவல் நீட்டிப்பு
ப.சிதம்பரத்திற்கு ஆக. 30 வரை சிபிஐ காவல் நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது. அதனால், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, கடந்த 5 நாட்களாக ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ப.சிதம்பரத்தின் காவலை 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.