புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை வரவேற்கும் வகையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் ஜிஎஸ்டி மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே தேசம், ஒரே வரி என்ற அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யை வரவேற்கும் வகையில், ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். அதில் இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்துடன் வெல்கம் ஜி.எஸ்.டி என எழுதியுள்ளார்.