இந்தியா
சர்வதேச அளவில் செம்மரக் கடத்தல்: கைதானார் விமான பணிப்பெண்
சர்வதேச அளவில் செம்மரக் கடத்தல்: கைதானார் விமான பணிப்பெண்
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த விமான பணி பெண் சங்கீதா சாட்டர்ஜியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
செம்மரக் கடத்தலில் சர்வதேச அளவில் தொடர்புடைய லட்சுமணன் என்பவரை, ஆந்திர மாநில சித்தூர் போலீஸார் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்தனர். ஆனால் அவரது தரப்பில் இருந்து 2-வது மனைவியான சங்கீதா சாட்டர்ஜி செம்மரங்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சங்கீதாவை போலீஸார் கைது செய்தனர். அதன்பின் ஆந்திர மாநில சித்தூருக்கு அழைத்துவரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.