இந்தியா
"செவிலியர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது"- ராம்நாத் கோவிந்த் புகழாரம்
"செவிலியர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது"- ராம்நாத் கோவிந்த் புகழாரம்
செவிலியர்கள் நாட்டைக் கட்டமைப்பவர்கள் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், நாட்டுக்கு செவிலியர்கள் அளித்து வரும் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு அளவிட முடியாதது என்று புகழாரம் சூட்டினார். செவிலியர் துறையை மேலும் வலிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறிய ராம்நாத் கோவிந்த், மக்களின் வாழ்வில் செவிலியர் முக்கிய இடம் வகிப்பதாகவும், அவர்களது சேவையை அனைவரும் அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். சிறந்து விளங்கிய 35 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.