ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மே 2ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தம்மை கைது செய்யக்கூடாது என கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இன்று வரை இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினால் கார்த்தி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இன்றுடன் இந்த அவகாசம் முடிவுக்கு வரும் நிலையில் கைது செய்வதற்கான தடையை மே மாதம் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அதே தேதிக்கு ஒத்தி வைத்தது.