டெல்லி செங்கோட்டை: 77வது சுதந்திர தின விழாவில் நடைபெற்ற சில சுவாரஸ்யங்கள்!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், நடைபெற்ற சில நிகழ்வுகளை பார்க்கலாம்.

- சுதந்திர தினவிழாவுக்காக செங்கோட்டைக்கு பிரதமர் நரேந்திரமோடி, ராஜஸ்தானி பாந்தினி அச்சு கொண்ட பலவண்ண தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

- காலை 7.30 மணிக்கு பிரதமர், மூவர்ணக்கொடியை ஏற்றினார். தேசியக்கொடியை ஏற்றியபோது, பார்வையாளர்கள் மீது, ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

- பத்தாவது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர், 90 நிமிடங்கள் உரையாற்றினார்.

- கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மீனவர்கள், சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத் தொழிலாளர்கள், செவிலியர் உட்பட 1800 சிறப்பு விருந்தினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

- ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 75 தம்பதியர், தங்கள் பாரம்பரிய உடையில் வந்து கலந்துகொண்டனர்.

- கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் 50 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

- இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா (RO KHANNA ) மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் (WALTS) உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம் சுதந்திர தினவிழாவில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com