திருப்பதி: கடவுள்களுக்கு அணிவித்த மாலையிலிருந்து ஊதுவத்திகள்

திருப்பதி: கடவுள்களுக்கு அணிவித்த மாலையிலிருந்து ஊதுவத்திகள்

திருப்பதி: கடவுள்களுக்கு அணிவித்த மாலையிலிருந்து ஊதுவத்திகள்
Published on

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கடவுள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் இருந்து தயாரித்த ஊதுவத்திகள் விற்பனை ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க உள்ளது.

இத்தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட மாலைகள் கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவை ஊதுவத்திகளாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் விற்கப்படும் இடத்திற்கு அருகிலேயே இந்த ஊதுவத்திகள் விற்கப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி தெரிவித்தார். இந்த ஊதுவத்தி விற்பனை பிறகு மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறினார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com