கர்நாடகா: அவசரசிகிச்சை நோயாளிகளை கொண்டுசெல்ல ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை
கர்நாடகாவில் கோவிட் -19 நோயாளிகள் உட்பட அவசர நோயாளிகளை கொண்டு செல்ல ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஹெலிகாப்டர் மூலமாக வான்வழி ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தரைவழி ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிட்டிகல் ஏர் டிரான்ஸ்ஃபர் டீம் (ஐ.சி.ஏ.டி.டி) மற்றும் விமான தொழில்நுட்ப நிறுவனமான கியாதி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். ஐசிஏடிடி அவசர மருத்துவ சேவை நிபுணர்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அவசர போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டிய விமானங்களுக்கு கியாதி பொறுப்பு.
பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமான ஆம்புலன்ஸ்கள், சுற்றியுள்ள இந்த மண்டலத்தில் சரியான நேரத்தில் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த உதவும். நகரத்தின் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் அதிகபட்ச பயண நேரத்தை கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான மருத்துவசேவை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த விமான ஆம்புலன்ஸ் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதிலுள்ள ஜெர்மன் தனிமைப்படுத்தும் பாட் மூலமாக, கோவிட் -19 போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கூட பாதுகாப்பாக கொண்டு செல்லலாம். இந்த வசதிக்கு ரூ20 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனர்.