கடன் செயலி மோசடி: டெல்லி போலீசிடம் சிக்கிய கும்பல் - பின்னணியில் சீன நபர்கள்

கடன் செயலி மோசடி: டெல்லி போலீசிடம் சிக்கிய கும்பல் - பின்னணியில் சீன நபர்கள்
கடன் செயலி மோசடி: டெல்லி போலீசிடம் சிக்கிய கும்பல் -  பின்னணியில் சீன நபர்கள்

கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டிய மோசடிக் கும்பலை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்மை காலமாக ஆன்லைன் மூலம் உடனடியாக கடன் வழங்கும் செல்போன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எளிதாகவும் விரைவாகவும் கடன் கிடைக்கும் போன்ற ஆசைவார்த்தைகளைக் கூறி வலைவிரிக்கும் இதுபோன்ற கடன் செயலி நிறுவனங்கள், கடன் வாங்கியவர்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்கின்றன. பணத்தேவை உள்ளவர்களுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று சிறிய தொகையை கடனாக வழங்கி அளவுக்கதிகமாக வட்டியை வசூலிக்கின்றனர். இதனால் பலர் வாங்கிய தொகையை விட லட்சக்கணக்கில் கடனைத் திருப்பி செலுத்த நேரிடுகிறது.

வாங்கிய பணத்தை தாமதமாகக் கட்டினாலோ அல்லது நிறுவனம் சொல்லும் கூடுதல் பணத்தைக் கட்டத் தவறினாலோ கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் தற்கொலைச் சம்பவங்களும் நடக்கின்றன. நாடு முழுவதும் இது போன்ற குற்றம் அதிகமாகிவருகிறது. இது போன்ற புகார்களால் ஏராளமான சீனக் கடன் செயலிகளை மத்திய அரசு கடந்த மாதம் தடைசெய்தது.

இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் திரட்டிய மோசடிக் கும்பலை டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் சீனாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக சீனாவை சேர்ந்த ஒருவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த நெட்வொர்க் பரவி இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: பெண் மருத்துவரின் ஓடிபி எண்ணை பெற்று ரூ.8 லட்சம் மோசடி – ஜார்கண்ட்டை சேர்ந்த 3 பேர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com