ஜார்க்கண்ட்டின் இளம் நட்சத்திரம் ஹேமந்த் சோரன்..!

ஜார்க்கண்ட்டின் இளம் நட்சத்திரம் ஹேமந்த் சோரன்..!
ஜார்க்கண்ட்டின் இளம் நட்சத்திரம் ஹேமந்த் சோரன்..!

பழங்கால வீட்டில் மனைவி சமைத்துக் கொண்டிருக்க அவர் அருகில் தோளில் துண்டு, டி ஷர்ட், வேட்டி என ஒரு சாமானிய மனிதர்போல நின்று கொண்டிருப்பவர்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இளம் அரசியல் நட்சத்திரம் ஹேமந்த் சோரன். இந்தியாவில் மாநில அரசியலில் வேகமாக வளர்ச்சி பெற்ற தலைவர்களில் ஒருவராக ஹேமந்த் சோரனை கூற முடியும். ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினத்தவர்களின் தலைவராக கருதப்படுபவரும் முன்னாள் முதலமைச்சருமான ஷிபு சோரனின் மகன்தான் ஹேமந்த் சோரன். தற்போது 45 வயதாகும் ஹேமந்த்தின் அரசியல் பிரவேசமே எதிர்பாராத வகையில் அமைந்தது.

ஷிபு சோரனின் மூத்த மகனும் ஹேமந்த் சோரனின் அண்ணனுமான துர்கா சோரன்‌ கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். இந்நிலையில் தனது அரசியல் வாரிசாக ஹேமந்த் சோரனை கொண்டு வந்தார் தந்தை ஷிபு சோரன். அந்தாண்டு மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற ஹேமந்த் பின்னர் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலில் நின்று வென்றார்.

பின்னர் கட்சியில் தனது இடத்தை வலுப்படுத்திக்கொண்டே வந்தார் இளம் தலைவரான ஹேமந்த் சோரன். இதன் பலனாக 2013ம் ஆண்டு முதலமைச்சராகவும் உயர்ந்தார் ஹேமந்த் சோரன். 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் முதல்வர் நாற்காலியிலிருந்து இறங்கினார் ஹேமந்த். தற்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை வெற்றிபெற வைத்துள்ளார். இந்நிலையில் ஐந்தாண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் முதல்வர் அரியணை ஏற உள்ளார் ஹேமந்த் சோரன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com