காலநிலை, வானிலை தரவுகளைப்பெற ‘INSAT - 3DS’ செயற்கைக்கோள் - பிப்ரவரியில் விண்ணில் ஏவும் இஸ்ரோ!

காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
‘இன்சாட்-3டிஎஸ்’
‘இன்சாட்-3டிஎஸ்’pt web

இஸ்ரோ 2024 புத்தாண்டில் கடந்த 1-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் ‘எக்ஸ்போசாட்’ என்ற ‘எக்ஸ்-ரே போலரிமீட்டர்’ என்ற செயற்கைக் கோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

இஸ்ரோ
இஸ்ரோ கோப்பு படம்

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6ஆம் தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய் வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளி யில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்-14 என்ற ராக்கெட்டில் இன்சாட்- -3டிஎஸ் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com