INS Aridhaman
INS Aridhamanweb

இந்திய கடற்படையில் புதிய சக்தி.. முன்பை விட நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இணைப்பு.!

இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
Published on
Summary

இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை பலமடங்கு உயர்த்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. இது கடலடியில் ரகசியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரம் நீரில் தங்கி, எதிரி இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' அதிகாரப்பூர்வமாக கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கியான அரிதமன், முந்தைய கப்பல்களை விடப் பெரியது. கடலுக்கு அடியில் எதிரிகளிடம் சிக்காமல் மிக ரகசியமாகச் செயல்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டது.

INS Aridhaman
INS Aridhamanweb

அதிகப்படியான K-4 ரக அணு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இக்கப்பல், நீண்ட நேரம் நீருக்கு அடியில் தங்கியிருந்து எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது.

தண்​ணீருக்​குள் மணிக்கு 45 கிலோ மீட்​டர் வேகத்​தில் இந்த நீர்​மூழ்கி கப்​பல் செல்​லும். இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் அரிஹன்ட் மற்​றும் ஐஎன்​எஸ் அரி​கட் நீர்​மூழ்கி கப்​பல்​களை விட இந்த கப்​பல் 2 மடங்கு சக்தி வாய்ந்​தது.

இந்த கப்​பலில் உள்ள அணு ஏவு​கணை கடலுக்​கடியி​லிருந்து வான் மற்​றும் தரை இலக்​கு​களை தாக்​கும் திறன் படைத்​தது. அரி​தமன் கப்​பலில் 24, ‘சகாரிகா கே-15’ ஏவு​கணை​கள் உள்​ளன. இவை 750 கிலோ மீட்​டர் முதல் 1,500 கிலோ மீட்​டர் இலக்​கு​களை தாக்​கும்.

INS Aridhaman
போர் பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாடு? இந்திய அரசு புதிய உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com