இந்தியா
சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய கைதி : வீடியோ கசிந்து சர்ச்சை
சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய கைதி : வீடியோ கசிந்து சர்ச்சை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விசாரணை கைதி ஒருவர் சிறையில் பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசத்தில் ஷிவேந்திரா சிங் என்பவர் கொலை குற்றத்திற்காக விசாரணை கைதியாக ஃபைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஷிவேந்திரா சிங் சிறை அதிகாரி முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
இதற்காக ஷிவேந்திரா சிங்கிடம் ஒரு லட்சம் ரூபாயை சிறை அதிகாரி பெற்றதாகவும் தெரியவந்துள்ளது. விசாரணை கைதியும் சிறை அதிகாரியும் பிறந்தநாள் கொண்டாடாடிய வீடியோ காட்சி அங்குள்ள கேமராவில் பதிவானது. இந்தக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியானதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டனர்.