ஐ.டி ஊழியரை கொலை செய்த பாதுகாவலர்

ஐ.டி ஊழியரை கொலை செய்த பாதுகாவலர்

ஐ.டி ஊழியரை கொலை செய்த பாதுகாவலர்
Published on

புனேயில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவன பெண் ஊழியரை பாதுகாவலர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே ஹின்ஜிவாடியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த ராசிலா ராஜூ, ஆன்லைன் மூலம் பணியாற்றி வந்துள்ளார். திடீரென மாலை 5 மணியளவில் ராசிலா ராஜூவிடமிருந்து ஆன்லைனில் எந்த பதிலும் வராத நிலையில் தலைமை நிறுவன ஊழியர் பாதுகாவலரை தொடர்பு கொண்டுள்ளார். 

ராசிலா ராஜூ அறையில் சென்று பார்த்த போது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பாதுகாவலர் பாபேன் சாய்ல்சியாவிடம் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் கணினியின் ஓயரால் ராசிலாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com