கேரள விமான விபத்து நடந்தது எப்படி? - வெளியானது முதற்கட்ட தகவல்
கேரள விமான விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. இதில் 191 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் அடங்கும்.
இதுவரை 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு குழந்தை, விமானி டி.எம்.சாதே உட்பட 15 உயிரிழந்துள்ளனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விமான விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விமானம் முதலில் தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தகவல் வெளியாகியுள்ளது.