உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்
Published on

வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதி ஆன முதல் பெண் என்ற பெருமையை இந்து மல்ஹோத்ரா என்பவர் பெறுகிறார். 

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே எம் ஜோசப் ஆகிய இரு பெயர்களை கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதில் இந்து மல்ஹோத்ராவுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதியளித்திருந்தது.  பொதுவாக மூத்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய பின் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்படுவர்.

இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக உத்தராகண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை பரிந்துரைத்த முடிவை பரிசீலிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜியத்தை அரசு இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் கருத்து வேறுபாடு நிலவுவது தெரியவந்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com