\
தூய்மையான நகரம்: இந்தூருக்கு 3 வது முறையாக விருது!

தூய்மையான நகரம்: இந்தூருக்கு 3 வது முறையாக விருது!

தூய்மையான நகரம்: இந்தூருக்கு 3 வது முறையாக விருது!
Published on

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்தூருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். 

தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான  விருது வழங்கும் விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார். 

இந்தியாவில் தூய்மையான நகரமாக இந்தூர் மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சத்தீஷ்கரில் உள்ள அம்பிகாபூர், கர்நாடகாவில் உள்ள மைசூர் ஆகிய நகரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. தூய்மையான மிகப்பெரிய நகரத்துக்கான விருது அகமதாபாத்துக்கும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கும் வழங்கப்பட்டுள் ளது. 

சிறந்த கங்கா மாவட்டத்துக்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற இந்தூருக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com