ஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்!

ஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்!

ஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்!
Published on

நான்கு மாடி ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உடல் நசுங்கி பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வேட் (Sarwate ) பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகே நான்கு மாடி கட்டிடம் ஒன்று அமைந்திருந்தது. இந்த கட்டிடத்தில் வலது பகுதி நேற்று நள்ளிரவு திடீரென்று பயங்கர சத்தத்துடன் இடிந்து, அருகில் இருந்த ஆட்டோ மற்றும் ஏடிஎம் இருந்த கட்டிடத்தின் மீது இழுந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் பத்து பேர் உடல் நசுங்கி பலியாகினர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. பலர் படுகாயமடைந்தனர். அவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com