\
உச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..!

உச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..!

உச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..!
Published on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீபதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

முன்னதாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்திரா பானர்ஜிக்கு பிரிவு‌ உப‌சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்‌ சக நீதிபதிகள், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மத்திய அரசின் வழக்கறிஞர்கள், வழக்கறிஞ‌ர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் ப‌ங்கேற்றனர்.‌

நிகழ்ச்சியில் பேசிய ‌நீதிப‌தி இந்திரா பானர்‌ஜி‌‌, மிகவும் கனத்த இதயத்தோடு விடை பெறுவதாகவும், சென்னை உய‌ர்நீதிமன்றம் இந்தியாவிலேயே சிறந்த நீதிமன்றமாக திகழ்வதாகவும் தெரிவித்தார். தன்னுடையை பணிக்காலத்தில் யாருக்கும் பயந்து தீர்ப்பு வழ‌‌ங்கியது இல்லை என்றும், சட்டத்தின்படியே தீர்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்திரா பானர்ஜி இன்று‌ உச்ச‌நீதிமன்ற நீதிபதியாக ‌பதவியேற்க உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com