\
பெண் பயணியிடம் தவறாக நடப்பதா? இண்டிகோ ஊழியர்கள் சஸ்பெண்ட்!

பெண் பயணியிடம் தவறாக நடப்பதா? இண்டிகோ ஊழியர்கள் சஸ்பெண்ட்!

பெண் பயணியிடம் தவறாக நடப்பதா? இண்டிகோ ஊழியர்கள் சஸ்பெண்ட்!
Published on

பெண் பயணிடம் அநாகரிமாக நடந்ததை அடுத்து, ஊழியர்கள் 2 பேரை இண்டிகோ விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கி வருகிறது இண்டிகோ நிறுவனம். இந்நிறுவனத்தின் கவுகாத்தி- டெல்லி விமானத்தில் கிருஷ்ண சர்மா என்ற பெண் வழக்கறிஞர் பயணம் செய்ய டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார். கவுகாத்தி விமான நிலையத்தில் அவரது லக்கேஜ்ஜை விமான ஊழியரிடம் கொடுத்த பின், அதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படத்தை அழிக்கச் சொன்னார் விமான ஊழியர். சர்மா அதை அழித்துவிட்டதாகக் கூறினார். இருந்தும் கேட்காத அந்த விமான ஊழியர், சர்மாவின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி, புகைப்படங்களை அழித்தாராம். இந்த செய்கையால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ண சர்மா, இதுபற்றி இண்டிகோ நிர்வாகத்திடம் புகார் செய்தார். இதையடுத்து அநாகரிகமாக நடந்துகொண்ட 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com