இதுதான் உங்க டக்கா? ஏர்போர்ட் ஷட்டில் பஸ்சில் 6 மணி நேரம் தூங்கிய பயணி!

இதுதான் உங்க டக்கா? ஏர்போர்ட் ஷட்டில் பஸ்சில் 6 மணி நேரம் தூங்கிய பயணி!

இதுதான் உங்க டக்கா? ஏர்போர்ட் ஷட்டில் பஸ்சில் 6 மணி நேரம் தூங்கிய பயணி!
Published on

விமான நிலையத்தில் உள்ள ஷட்டில் பஸ்சில் பயணி ஒருவர் சுமார் 6 மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினய் பிரேம் என்ற பயணி, மும்பையில் இருந்து பெங்களூர் செல்ல, இண்டிகோ விமானத்தில் கடந்த 4-ம் தேதி டிக்கெட் புக் செய்திருந்தார். அதன்படி மும்பை விமான நிலையம் வந்தார். உள்நாட்டு முனையத்தில் பரிசோதனைகளை முடித்து போர்டிங் பாஸுடன் கேட்டுக்கு சென்றார். விமானம் புறப்படும் முன், கேட்டில் இருந்து விமானத்துக்கு செல்லும் ஷட்டில் பஸ்சில் பயணிகள் ஏற்பட்டனர். இங்கும் அனைத்து பயணிகளும் வந்துவிட்டார்களா என்று சோதனை செய்யப்படுவது உண்டு. அதன்படி வினய் பிரேமின் டிக்கெட்டும் சோதனை செய்யப்பட்டு, ஷட்டில் பஸ்சில் ஏற்றப்பட்டார். வினய்க்கு என்ன அசதியோ தெரியவில்லை. பஸ்சின் கடைசி சீட்டில் உட்கார்ந்தவர், அப்படியே தூங்கிவிட்டார். இவ்வளவுக்கும் கேட்டில் இருந்து விமானம் நிற்கும் இடத்துக்கு அந்த பஸ் செல்ல, ஐந்து நிமிடம் கூட ஆகாது. அதற்குள் தூங்கிவிட்டார் வினய். விமானத்தில் டிக்கெட் செக் பண்ணுபவர்கள் கூட இதைக் கவனிக்கவில்லை. விமானம் சரியான நேரத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டது. 

சுமார் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு, ஷட்டில் பஸ் டிரைவர் ஷிப்ட் மாறினார். வேறு டிரைவர் வந்து பார்த்தால், பஸ்சின் கடையில் யாரோ ஒருவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை உசுப்பினால்,’அப்புறம் நான் எங்க இருக்கேன், என் பிளைட் என்னாச்சு?’ என்று கேட்க, ஒரே களேபரம். 

பிறகு இந்த விஷயம் போலீஸுக்கு சென்றது. அடுக்கடுக்கான பாதுகாப்புகளைத் தாண்டிதான் பயணிகள், விமானத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். போர்டிங் பாஸ் விமானத்தில் ஏறும்வரை காட்டப்பட வேண்டும். அப்படியிருந்தும் ஒருவரை மிஸ் பண்ணிவிட்டு விமானம் எப்படி புறப்பட்டது? பலத்த பாதுகாப்பு இருந்தும் எவ்வாறு இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com