இண்டிகோ விமானம்pt
இந்தியா
6-வது நாளாக சீராகாத இண்டிகோ விமானச்சேவைகள்.. பயணிகள் பாதிப்பு!
தொடர்ச்சியாக ஆறாவது நாளாக இண்டிகோவின் விமானச்சேவைகள் சீராகாமல் இருந்துவருகிறது.. பயணிகள் பாதிப்படைவது குறித்து மத்திய அரசு இண்டிகோவிடம் விளக்கம் கேட்டுள்ளது..
இண்டிகோ விமானச்சேவைகள் 6ஆவது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளன. 650 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தசூழலில் பயணிகள் பாதிப்பு குறித்து இண்டிகோவிடம் மத்திய அரசு விளக்கம் கோரியிருந்தது..
விமானச்சேவைகள் பாதிப்பு குறித்து விளக்கம் அளித்திருக்கும் இண்டிகோ நிறுவனம், நிலைமை வேகமாக சீரடைந்து வருவதாக தெரிவித்துள்ளது,
இண்டிகோ விமானம்PT
ஆயிரத்து 500 விமானச்சேவைகள் வழங்கப்படுவதாகவும் மொத்தமுள்ள 138 இடங்களில் 135 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்கள் குறித்த நேரத்தில் இயங்குவது 30 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இண்டிகோ கூறியுள்ளது.
இதற்கிடையே விமான நிலையங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய பயணிகள் விமானப்போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது

