இண்டிகோ விமானத்துக்குள் 7 மணி நேரம் சிக்கிய பயணிகள்

இண்டிகோ விமானத்துக்குள் 7 மணி நேரம் சிக்கிய பயணிகள்

இண்டிகோ விமானத்துக்குள் 7 மணி நேரம் சிக்கிய பயணிகள்
Published on

கடும் மழை காரணமாக, இண்டிகோ விமானத்துக்குள் சுமார் 7 மணி நேரம் பயணிகள் சிக்கிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.

மும்பையில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய 280 விமானங்களின் சேவை தாமதமானதாக மும்பை விமான நிலையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இண்டிகோ விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்த நிலையில் நிறுத்தப்பட்டதால், 7 மணி நேரம் விமானத்துக்குள் தவித்துள்ளனர்.

மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் இண்டிகோ விமானம் நேற்று மாலை 3.15 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் ஏறிய நிலையில் மழை காரணமாக, அரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று விமானி அறிவித்தார். பின்னர் அடுத்தடுத்து அரைமணி நேரம், அரை மணி நேரம் என்று அவர் தள்ளிக்கொண்டே சென்றதால் பயணிகள் வெறுப்படைந்தனர். விமானத்துக்குள் உணவும் தண்ணீரும் போதுமானதாக வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் சிலர் ட்விட்டரில், தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
அவர்கள் விமானத்துக்குள் இருந்தபடி பணிப்பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விமானம் 10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

இதுபற்றி இண்டிகோ விமானம் அளித்துள்ள விளக்கத்தில், ‘தொடர் மழை காரணமாக விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கிவிட்டது. அதனால் விமானங்கள் வரவு தாமதமாகிவிட்டது. புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் கால தாமதமாகிவிட்டது. அதோடு, கேப்டன் உள்ளிட்ட ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவதற்கு இயலாமல் போய்விட்டது’ என்று தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com