ரக்‌ஷாபந்தனுக்கு சீன ‘ராக்கி’யை புறக்கணிக்க மன்றாடும் பழங்குடியின மக்கள்!

ரக்‌ஷாபந்தனுக்கு சீன ‘ராக்கி’யை புறக்கணிக்க மன்றாடும் பழங்குடியின மக்கள்!
ரக்‌ஷாபந்தனுக்கு  சீன ‘ராக்கி’யை புறக்கணிக்க மன்றாடும் பழங்குடியின மக்கள்!

வரும் ஆகஸ்ட்-3 ஆம் தேதி சகோதரத்துவத்தை அடையாளப்படுத்தும் ’ரக்‌ஷாபந்தன்’ விழா இந்தியா முழுக்க கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி, ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின மக்களின் சேவை அமைப்பான கலாமந்தீரில்  ‘ராக்கி’ கயிறு தயாரிக்கும் தொழிலில் பழங்குடியின மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உள்நாட்டு ராக்கியை விட்டுவிட்டு சீன ராக்கியை மக்கள் விரும்புவதாக குற்றம்சாட்டியிருப்பதோடு தாங்கள் தயாரிக்கும் ராக்கிகளை வாங்கச்சொல்லி கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

 பழங்குடியின மக்கள் தயாரிக்கும் ராக்கிகள்

இதுகுறித்து, பேசிய கலாமந்திரீல் பணிபுரியும் பழங்குடியின மக்கள்  ஒருங்கிணைப்பாளர் அமிதாப் கோஷ், “இது, நம் மக்களே தயாரிக்கும் தரமான சுதேசி ராக்கி. ஆனால், கவர்ச்சியாக இருக்கும் சீப்பான சீன ராக்கியை, அதாவது ப்ளாஸ்ட்டிக் சேர்க்கப்படும் ராக்கியை வாங்குகிறார்கள். குறிப்பாக குஜராத், மாநிலத்தில்தான் அதிகமாக சீன ராக்கிகளை வாங்குகிறார்கள். இதனால், கழட்டி வீசப்படும் ராக்கிகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகள் ஏற்படும். ஆனால், நாங்கள் தயாரிக்கும் ராக்கிக் கயிறோ பாரம்பரிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, கொரோனாவால் எங்களது தொழில் முடங்கிபோய் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். தற்போது, இந்த ராக்கிக் கயிறு விற்பனையைத்தான் நம்பியிருக்கிறோம். அதனால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சீன ராக்கிக் கயிறுகளை கடைக்காரர்களும் மக்களும் வாங்குவதை புறக்கணிக்கவேண்டும். நம், நாட்டு மக்கள் தயாரிக்கும் தரமான ஆரோக்கியமான ராக்கிக் கயிறுகளை வாங்கி உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பழங்குடியின மக்கள் தயாரிக்கும் ராக்கி கயிறுகளைக் கட்டும்போது அவர்களது குடும்பத்திலுள்ளவர்களின் வயிற்றுப் பசியையையும் வறுமையையும் போக்கி அவர்களுடனான  சகோதரத்துவத்தையும் உறுதியாக்கிக்கொள்ளாமே!? என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com