indias feb gold imports to hit 20 year low on record
தங்கம்முகநூல்

தங்கம் இறக்குமதி | 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு!

இந்தியாவில் தங்கம் இறக்குமதி, பிப்ரவரி மாதத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
Published on

இந்தியாவில் தங்கம் இறக்குமதி, பிப்ரவரி மாதத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 15 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த அளவாகும். இதுவே முந்தைய 2024ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 103 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் தங்கம் இறக்குமதி சராசரியாக 76.5 டன்களாக பதிவாகியிருந்தது.

indias feb gold imports to hit 20 year low on record
தங்கம் pt

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பொருளாதார அரசியல் சூழல்கள் காரணமாக, தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால், அதன் விலை உச்சத்திலேயே இருக்கிறது. இதனால், வங்கிகளும் வியாபாரிகளும் மிகக் குறைந்த அளவு தங்கத்தையே இறக்குமதி செய்து உள்ளனர்.

indias feb gold imports to hit 20 year low on record
தங்கம் இறக்குமதி ‌5ஆவது மாதமாக சரிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com