உலகளாவிய கோடீஸ்வரர்கள்....191 ஆக உயர்ந்த இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை!
உலகளாவிய கோடீஸ்வரர்கள், சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு அண்மையில், 2025-ம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டது.
அதில், 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 பேராக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
அறிக்கையில் கூறப்படுவது என்ன?
நைட் ஃபிராங்க் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெறும் 7 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்தனர், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 26 புதிய கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 191 பேர் 100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத்துள்ளனர். 2024 ல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 80, 686 ஆக இருந்த நிலையில், 2024 ல் அதன் எண்ணிக்கை, 85, 698 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் 93,753 பேர் சுமார் ரூ.87 கோடி சொத்து மதிப்புள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.