\
இந்தோனேஷிய நிலநடுக்கம் - இந்தியாவுக்கு பாதிப்பில்லை

இந்தோனேஷிய நிலநடுக்கம் - இந்தியாவுக்கு பாதிப்பில்லை

இந்தோனேஷிய நிலநடுக்கம் - இந்தியாவுக்கு பாதிப்பில்லை
Published on: 

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது.

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெளமரே அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என தகவல் வெளியாகவில்லை. இதனால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது. 2004 டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com