\
இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள்: 10வது ஆண்டாக அம்பானி முதலிடம்

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள்: 10வது ஆண்டாக அம்பானி முதலிடம்

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள்: 10வது ஆண்டாக அம்பானி முதலிடம்
Published on

ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 10வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டிற்கான பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இவர் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் 2வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் ப்ரேம்ஜியும், மூன்றாவது இடத்தில் ஹிந்துஜா குரூப்ஸ் உள்ளது. நான்காம் இடத்தை லக்‌ஷ்மி மிட்டல் பிடித்துள்ளார். முதலிடத்தில் உள்ள அம்பானியின் சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர். இரண்டாவது இடத்தில் உள்ள அசிம் ப்ரேம்ஜியின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com