\
இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை - உடலை கொண்டுவர நடவடிக்கை

இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை - உடலை கொண்டுவர நடவடிக்கை

இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை - உடலை கொண்டுவர நடவடிக்கை
Published on: 

இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் தான் இவர் படிக்கச் சென்றுள்ளார். உணவகத்தில் பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.



இந்நிலையில், சுரங்க ரயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்த இவரை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அவரது உடலை எடுத்து வர தேவையான நடவடிக்கையை எடுக்கப்படுவதாக, கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

எதற்காக தனது மகன் கொல்லப்பட்டார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை என்றும், கனடா பாதுகாப்பான நாடு என தனது மகன் எப்போதும் கூறி வந்ததாகவும், கார்த்திக்கின் தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.





logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com