இந்திய பங்கு சந்தை
இந்திய பங்கு சந்தைPT

கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிவு - காரணம் என்ன?

அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்றால் மற்றும் இந்திய ரூபாயின் சரிவு போன்றவற்றால் பங்குசந்தை கடும் வீழ்ச்சியடைந்தன.
Published on

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின. முற்பகல் 12 மணி வாக்கில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 200 புள்ளிகள் சரிந்து 78 ஆயிரத்து 22 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 389 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23 ஆயிரத்து 618 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாடா மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின.

பங்கு சந்தை சரிவுக்கான காரணம்

அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்றால் மற்றும் இந்திய ரூபாயின் சரிவு, ஆசிய சந்தைகளின் மோசமான செயல்திறன், 3 ஆம் காலாண்டு நிதிநிலை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு, அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது ஆகியவற்றால் இந்திய பங்கு சந்தையானது கடும் சரிவை சந்தித்தன.

சரிவுடன் முடிந்த வர்த்தகம்

இன்றை முடிவில், பிஎஸ்இ சென்செக்ஸ் கணிசமாக 1258.12 புள்ளிகள் அதாவது 1.59 சதவீதம் சரிந்து 77964.99 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல் நிஃப்டி 388.70 புள்ளிகள் அதாவது 1.62 சதவிகித புள்ளிகள் சரிந்து 23636 ல் பங்குசந்தை முடிவடைந்தது.

இந்திய பங்கு சந்தை
இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

சரிவையும் உயர்வையும் சந்தித்த பங்குகள்

இதில் முக்கிய பங்குகளான பிஎஸ்இ-ன் உதிரிபாகங்களில், டாடா ஸ்டீல், என் டிபிசி, கோடக் கஹிந்திரா வங்கி, இண்டஸிண்ட் வங்கி, பவர் கிரிட், ஜொமாடோ, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இழப்புகள் காணப்பட்டன. டைட்டன் மற்றும் சன் பார்மா மட்டுமே முதலீட்டாளாருக்கு லாபத்தை கொடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com