கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வெற்றி?

கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வெற்றி?

கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வெற்றி?
Published on

கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதைக்கொண்டு இன்னும் 2 ஆண்டுகளுக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் கடும் அச்சத்தில் உள்ளன. குறிப்பாக சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-த்தை தாண்டியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலி உள்ளது. இங்கும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தியாவை பொருத்தவரை தற்போது வரை 76 நபர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாவும் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தின் உயரதிகாரி ராமன் கங்காகேத்கர், கொரோனாவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது “கொரோனா பாதித்தவர் உடலில் இருந்து 11 வைரஸ்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் கடின முயற்சிக்கு பின் இது சாத்தியமாகியுள்ளது. இந்த வைரஸ்களை கொண்டு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். இந்தியாவில் இதுவரை 52 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 57 ஆய்வகங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் வசதி இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com