ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியர் விடுவிப்பு:18 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார்

ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியர் விடுவிப்பு:18 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார்
ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியர் விடுவிப்பு:18 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார்

லிபியாவில், பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய மருத்துவர் ராமமூர்த்தி கோசனம் 18 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமமூர்த்தி கோசனத்தை கடந்த 18 மாதங்களுக்கு முன் ‌ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இந்திய அரசின் தீவிர முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ள அவர் நேற்று டெல்லி திரும்பியுள்ளார். ‌தன்னை மீட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுக‌ப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருக்கு ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார். ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த ராமமூர்த்தி, ஈராக், சிரியா, நைஜீரியா மற்றும் பிற இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயலை வீடியோக்களில் பதிவிட்டு, அதை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com