13,000 இந்திய ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு வேட்டு
இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வரும் 13,000 தொழிலாளர்களை விடுவிக்க இந்திய ரயில்வே முடிவு எடுத்துள்ளது.
முறையான முன்னறிவிப்பு ஏதுமின்றி நீண்ட நாள் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேரிக்க இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டது. இதில் இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 13 லட்சம் தொழிலாளர்களில், 13,000 தொழிலாளர்கள் முறையான முன்னறிவிப்பு இல்லாமலும், சம்பந்தப்பட்ட மேல் அதிகாரியின் அனுமதி பெறாமலும் அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்தது தெரியவந்தது. இத்ததைகய தொழிலாளர்களை ஒழுங்கு நடவடிக்கை மூலம் பணியிலிருந்து விடுவிக்க இந்திய ரயில்வே முடிவு எடுத்துள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் உத்தரவுப்படி இந்திய ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்திய ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் பயணிகளின் சிரமம் சற்று குறையும் என்றும் கருதப்படுகிறது.