இந்தியா
எம்-ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: ரயில்வே அறிவிப்பு
எம்-ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: ரயில்வே அறிவிப்பு
மொபைல் ஃபோன்களில் உள்ள மின்னணு வடிவ ஆதார் அட்டையை பயணிகள் அடையாள ஆதாரமாக காட்டலாம் என ரயில்வே துறை தெரிவித்துளளது.
ரயிலி்ல் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அடையாள ஆவணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டும். இந்நிலையில், மொபைல் ஃபோன்களில் உள்ள மின்னணு வடிவ ஆதார் அட்டையை பயணிகள் அடையாள ஆதாரமாக காட்டலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது. எம்-ஆதார் (m-aadhar) என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனினும் ஆதார் எண் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த எண்ணிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.