சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவரா நீங்கள் ? இதனை கவனியுங்கள் !

சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவரா நீங்கள் ? இதனை கவனியுங்கள் !
சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவரா நீங்கள் ? இதனை கவனியுங்கள் !

நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

இந்தச் சிறப்பு ரயில்கள் புது டெல்லியிலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஷ்வர், செகுந்தராபாத், பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மடகான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையங்களிடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்தச் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்கான வழிக்காட்டுதல் நெறிமுறைகளை ரயில்வே வழங்கியுள்ளது.

பயணிகள் கவனிக்க வேண்டியவை:

ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். உறுதிச் செய்யப்பட்ட டிக்கெட்டுகளே வழங்கப்படும். ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் வழங்கப்படாது.

பயணம் செய்வதற்கு 7 நாள்களுக்கு முன்புதான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

பயணம் மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்ய முடியும். அப்படி ரத்து செய்யும்பட்சத்தில் பயணக் கட்டணத்தில் இருந்து 50 சதவிதம் பிடித்தம் செய்யப்படும். உறுதிச் செய்யப்பட்ட டிக்கெட் வைத்துள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் தங்களுக்கு தேவையான படுக்கை விரிப்புகள், போர்வைகள், குடிநீர், உணவு ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். குடிநீர் தேவையென்றால் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.

ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

மருத்துவச் சோதனை நடைபெறும் என்பதால் பயணிகள் தங்களது ரயில் பயண நேரத்துக்கு 90 நிமிடத்துக்கு முன்பாக ரயில் நிலையம் வந்துவிட வேண்டும்.

சிறப்பு ரயில்கள் ஏசி பெட்டிகள் மட்டுமே இருக்கும், இதற்கு ராஜ்தானி விரைவு ரயில்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com