அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு..!

அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு..!
அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு..!

நாடெங்கும் ரயில் கட்டணங்கள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண ரயில்களின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குளிர்சாதன வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜ்தானி ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிவிரைவு ரயில், டிக்கெட் முன்பதிவு கட்டணங்களில் மாற்றமில்லை என்றும், ஏற்கெனவே முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கு கட்டண உயர்வு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரயில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com